[தமிழ்] ஸ்கிராட்ச்டோபர் 2024 ----- ஸ்கிராட்ச்டோபர் 2024க்கு வரவேற்கிறோம்! அணிகளின் பட்டியலை இங்கே காண்க: https://scratch.mit.edu/projects/1068757249/ ஈங்தொபர் ஆல் உக்கமளிக்கப்பட்ட ஸ்கிராட்ச்டோபர் 2024, ஒக்டோபரில் இரண்டு வாரங்களில் திட்டங்களில் உத்வேகமாகப் பயன்படுத்த அணிகளின் பட்டியலை (சொற்கள், யோசனைகள், கருப்பொருள்கள்) வழங்கும். இந்த அணிகளிலிருந்து நீங்கள் கலைப்படைப்புகள், விளையாட்டுகள், அனிமேஷன்கள், கதைகள், பயிற்சிகள் அல்லது நீங்கள் கற்பனை செய்யக்கூடிய வேறு எதையும் உருவாக்கலாம்! உதாரணமாக, அணி “டூடுல்” (doodle) என்றால் நீங்கள்: - "டூடுல்" என்ற வார்த்தையைக் கேட்டால் என்ன நினைவுக்கு வருகிறது? அதை வரைந்து அதை ஊடாடச் செய்யுங்கள்! - மற்றவர்கள் தங்கள் சொந்த டூடுல்களை வரைய அனுமதிக்கும் பேனா திட்டத்தை உருவாக்கவும். - ஒரு கலைக் கடையில் ஒரு விளையாட்டை உருவாக்கவும், அங்கு நீங்கள் டூட்லிங்கில் மாஸ்டர் ஆக பல்வேறு கலைக் கருவிகளை சேகரிக்க வேண்டும்! - ஒரு தொழில்முறை டூட்லராக வேண்டும் என்று கனவு காணும் பென்சில் பற்றி ஒரு கதை அல்லது கவிதை எழுதுங்கள். - டூடுல் செய்ய உங்களுக்குப் பிடித்தமான விஷயம் இருக்கிறதா? மற்றவர்களும் அதை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள உதவும் ஒரு பயிற்சியை உருவாக்கவும். - முழுக்க முழுக்க டூடுல்களால் உருவாக்கப்பட்ட ஒரு உலகத்தை கற்பனை செய்து அதை உயிர்ப்பிக்கவும். - இந்தத் தீமினைச் சுற்றி ஸ்டுடியோவில் ஒரு திட்டத்தை ரீமிக்ஸ் செய்து உங்கள் சொந்த யோசனைகளைச் சேர்க்கவும்! நினைவில் கொள்ளுங்கள், இவை பரிந்துரைகள் மட்டுமே! உங்கள் சொந்த யோசனைகளைக் கொண்டு வரவும் அல்லது ஏற்கனவே ஸ்டுடியோவில் உள்ள திட்டங்களில் இருந்து உத்வேகம் பெறவும் உங்களை வரவேற்கிறோம். மேலும், ஒரு அணி, சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் வைத்து இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும், அது பரவாயில்லை! எடுத்துக்காட்டாக, "டூடுல்" என்ற சொல் ஒரு வகை வரைதல், சில நாய்களின் இனங்கள், கூகுள் டூடுல்கள் போன்றவற்றைக் குறிக்கலாம். சில நேரங்களில் நமக்கு மிகவும் வெளிப்படையான அர்த்தம் மற்றவர்களுக்கு வேறு ஏதாவது இருக்கும், இது மிகவும் உற்சாகமான மற்றும் ஊக்கமளிக்கும் விஷயங்களுக்கு வழிவகுக்கும்! அணிகளின் பட்டியலை இங்கே காண்க: https://scratch.mit.edu/projects/1068757249/ ஒவ்வொரு நாளும் நாங்கள் ஒரு அணியை ஹைலைட் செய்வோம், ஆனால் நீங்கள் ஒரு திட்டப்பணியை முன்கூட்டியே தொடங்க விரும்பினால், அதற்கான அணிகளின் பட்டியலை முன்கூட்டியே பார்க்கலாம். நீங்கள் ஒரு முறை, இரண்டு முறை அல்லது எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்! ஸ்கிராட்சர்கள் என்ன உருவாக்குகின்றன என்பதைப் பார்க்க ஒவ்வொரு நாளும் திரும்பி வாருங்கள் ^.^ நீங்கள் என்ன உருவாக்குவீர்கள்? - - - அணிப் பட்டியல்: நாள் 1. டூடுல் நாள் 2. வானவில் நாள் 3. நீர்க்குமிழ்கள் நாள் 4. இலையுதிர்காலம் நாள் 5. சோளப்பொரி நாள் 6. தீவு நாள் 7. நிழல் நாள் 8. விடுமுறை நாள் 9. வேகமாக நாள் 10. அமானுஷ்யம் (இயற்கைக்கு) அப்பாற்பட்டது நாள் 11. பள்ளம் நாள் 12. எழுத்துக்கூட்டு,மந்திரச் சொல்,etc. நாள் 13. நாளை நாள் 14. ஆலோவீன்