கீழுள்ள போரம் போஸ்டின் மூலம் இந்த நிகழ்வை பற்றிய மேலதிக தகவல்களை பெற முடியும்: https://scratch.mit.edu/discuss/topic/789167 ஸ்கிராட்ச் இம்முறை, ஊக்கமளிக்கும், இளம் விஞ்ஞானி மற்றும் கண்டுபிடிப்பாளர் கீதாஞ்சலி ராவுடன் இணைந்து மணித்தியால கோடிங் நேரம் 2024 ஐக் கொண்டாடவுள்ளது. அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துப் பேசும் தன்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு ஆராய்ந்து ரீமிக்ஸ் செய்ய இரண்டு செயற்பாடுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் யூடியூப் சேனலில் [YouTube] (youtube.com/c/ScratchTeam) டிசம்பர் 10 ஆம் தேதி, பிற்பகல் 1 மணிக்கு, ஸ்கிராட்ச் குழுவைச் சேர்ந்த மாறன் மற்றும் கீதாஞ்சலி ஆகியோருடன் நேரடி கிரியேட்-அலாங் [Live create along] நிகழ்ச்சியில் எங்களுடன் இணைந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். முதல் செயல்பாட்டாக, எங்கள் கண்டுபிடிப்பு நிலைய ஸ்டார்டர் தொடங்குபவர் திட்டத்தை நீங்கள் ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது உங்கள் கண்டுபிடிப்பு வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பின் குறிக்கோள் அல்லது நோக்கத்தை தட்டச்சு அல்லது குரல் பதிவு மூலம் பகிர்ந்து கொள்ளும் உங்கள் சொந்த திட்டத்தை உருவாக்கலாம். கீதாஞ்சலியின் புதுமை செயல்முறை பற்றி அறிய எங்கள் ஸ்டார்டர் திட்டத்தைப் பார்க்கவும். எங்கள் கண்டுபிடிப்பு நிலைய ஸ்டார்டர் திட்டத்தை இங்கே காணலாம்: https://scratch.mit.edu/projects/1047946712, மேலும் தகவல்களுக்கும் யோசனைகளுக்கும் இங்கே எங்கள் கோடிங் அட்டைகளைப் பார்க்கவும்: https://resources.scratch.mit.edu/www/cards/en/ScratchHOC2024Gitanjali-InventionCards.pdf இரண்டாவது செயல்பாட்டாக, எங்கள் கருணைக்குழு ஸ்டார்டர் திட்டத்தை நீங்கள் ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கான கொடுமைப்படுத்துதல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான கீதாஞ்சலியின் புதுமையான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்ட கருணையின் செய்தியைப் பகிர்ந்து கொள்ள உங்கள் சொந்த திட்டத்தை உருவாக்கலாம். எங்கள் கருணைக்குழு ஸ்டார்டர் திட்டத்தை இங்கே காணலாம்: https://scratch.mit.edu/projects/1047946877, மேலும் தகவல்களுக்கும் யோசனைகளுக்கும் இங்கே எங்கள் கோடிங் அட்டைகளைப் பார்க்கவும்: https://resources.scratch.mit.edu/www/cards/en/ScratchHOC2024Gitanjali-KindnessCards.pdf கீதாஞ்சலி ஒரு எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் உலகெங்கிலும் STEM கல்வியின் செயலில் ஊக்குவிப்பவர். 2019 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் என "அறிவியலில் 30 வயதுக்குட்பட்டவர்கள்" கௌரவிக்கப்பட்துடன், அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளவில் அவர் நடத்தும் STEM பட்டறைகளுக்காக TIME "சிறந்த இளம் கண்டுபிடிப்பாளர்" மற்றும் "ஆண்டின் டைம் சிறுவர்" ஆகவும் அவர் கௌரவிக்கப்பட்டார். புதிய யோசனைகளை முயற்சிக்கவும், மற்றவர்களுடன் சமூகத்தில் அர்த்தமுள்ள தீர்வுகளை உருவாக்கவும் இளம் கண்டுபிடிப்பாளர்களை அவர் ஊக்குவிக்கிறார். தீர்வுகள் தேவைப்படும் சிக்கல்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், உலகை மாற்றக்கூடிய அற்புதமான விஷயங்களை உருவாக்க முன்மாதிரிகள், திட்டங்கள் மற்றும் தயாரிப்புகளில் எங்கள் யோசனைகளை உயிர்ப்பிப்பதன் மூலமும் கண்ணுக்குத் தெரியாததை நாம் காணக்கூடியதாக மாற்ற முடியும்! நீங்கள் என்ன உருவாக்க போறீர்கள்? =^..^= 'Hour of™ Code' / 'Hora del Código®' என்பது கணினி அறிவியல் கல்வி வாரம் மற்றும் Code.org, மில்லியன் கணக்கான மாணவர்களை ஒரு மணிநேர கணினி அறிவியல் மற்றும் கணினி நிரலாக்கத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாகும். ------- ஸ்டுடியோவைப் பார்வையிட, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க: ------- மேலதிக பிற மொழிபெயர்ப்புகளைக் காண, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க: ------- Definitely, the hardest one I've ever translated :P