ஓர் அழகான கிராமத்தில் ஒரு பெரிய கடல் இருந்தது. அக்கடலில் “லூனா” என்கிற பெண் மீனும் “நேமோ” என்கிற ஆண் நண்டும் இருந்தது. அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் எங்குச் சென்றாலும் ஒன்றாகதான் செல்வார்கள். ஒருநாள், லூனாவும் நேமோவும் பக்கத்து கரைக்குச் சுற்றி பார்க்கச் சென்றனர். அப்போது, அவர்கள் ஒரு பெரிய சுறாவை கண்டனர். இதைப் பார்த்த சுறா அவர்களை சாப்பிட நெருங்கி வந்தது. இதைக் கண்ட லூனாவும் நேமோவும் உடனே அவ்விடத்தை விட்டு வேகமாக அவர்கள் இருப்பிடத்திக்கு நீந்திச் சென்றனர்.