(தமிழ்) மொழிபெயர்ப்பு Propose Projects To Be Featured into "திட்டங்களை ஃபீச்சர் செய்ய பிரப்போஸ் பண்ணுங்கள்" புதிய க்யூரேட்டர்ஸ்: தயவு செய்து கீழே உள்ள விளக்கத்தை வாசிக்கவும். இந்த ஸ்டுடியோவிலிருந்து ஸ்கிராட்ச் அணி ஃபீச்சர் செய்ய திட்டங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த விளக்கத்தை வாசித்த பின்பு வேறொறுவரால் செய்யப்பட்ட திட்டங்களை நீங்கள் பிரப்போஸ் செய்யலாம். ஒரு திட்டத்தை பிரப்போஸ் செய்வதற்கு... - நீங்கள் ஒரு ஸ்கிராட்சராக இருக்க வேண்டும் (நீங்கள் ஒரு புதிய ஸ்கிராட்சராக என்றால், நீங்கள் ஒரு ஸ்கிராட்சாராகும் வரை காத்திருக்கவும்) - திட்டம் உங்களைத் தவிர வேறொருவரால் செய்யப்பட வேண்டும் - திட்டமானது சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் நாங்கள் இவ்வகையான திட்டங்களை தேடுகிறோம்: - எளிமையான திட்டங்கள் - சிக்கலான திட்டங்கள் - ஸ்கிராட்ச்சின் புதுமையான பயன்பாட்டைக் காட்டும் திட்டங்கள் - ஒத்துழைப்பு மற்றும் ரீமிக்ஸ் செய்வதை ஊக்குவிக்கும் திட்டங்கள் - ஏற்கனவே முன்பக்கத்தில் அதிகம் வராத நபர்களின் திட்டங்கள் - நமது சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மையைக் (Diversity) காட்டும் திட்டங்கள் (பால், வயது, கலாச்சாரம், நாடு, ஆர்வங்கள், மொழி போன்றவை) - பல்வேறு வகையான மக்கள் மகிழ்ச்சியாகக் காணக்கூடிய திட்டங்கள் - ஊக்குவிக்கும் திட்டங்கள் ஒரு திட்டத்தை பிரப்போஸ் செய்ததால் நாங்கள் அதை ஃபீச்சர் செய்வோம் என்றல்ல - நாங்கள் பரிந்துரைகளை மட்டுமே தேடுகிறோம். சிறப்பான திட்டங்களைக் கண்டறிய நாங்கள் பல முறைகளைப் பயன்படுத்துகிறோம், எனவே பரிந்துரைக்கப்படாத விடயங்களை நாங்கள் அடிக்கடி ஃபீச்சர் செய்கிறோம்! நன்றி! PS: ஒரு ஸ்டுடியோவைப் ஃபீச்சர் செய்வதற்காக பிரப்போஸ் பண்ண விரும்பினால், அதை இங்கே செய்யலாம்: https://scratch.mit.edu/discuss/topic/697636/ ~~~~~~~~~~~~~ க்யூரேட்டர்களுக்கான வழிமுறைகள்: யாதேனும் ஒரு திட்டத்தை பிரப்போஸ் செய்தால், அதை செய்தவர் ஒரு ஸ்கிராச்சர் என்பதைச் பார்க்கவும், அவர்கள் திட்டத்தை உருவாக்கிய பயனர் அல்ல, மேலும் திட்டமானது சமூக வழிகாட்டுதல்களை வெளிப்படையாக மீறாது. ஸ்கிராட்ச் அணியில் இதை எளிமையாகச் செய்ய உதவும் கருவிகள் இருப்பதால், பயனர் முதல் பக்கத்தில் இருந்தாரா அல்லது Alt Account என்பதை ஆராய வேண்டிய அவசியமில்லை. படைப்பாளி பெரும்பாலும் முதல் பக்கத்தில் இருப்பதை நீங்கள் அறிந்தால், திட்டத்தைச் சேர்க்க வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்யலாம், ஆனால் அதைப் பற்றி வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. (திட்டம் சேர்க்க வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், அதை எப்போதும் சேர்க்கவும்.) நீங்கள் ஒரு திட்டத்தைச் சேர்க்கும்போது, "சேர்க்கப்பட்டது (Added)!" என்று கருத்துத் தெரிவிக்கவும். அல்லது அப்படி ஏதாவது :) இனி Love எண்ணிக்கை பற்றி எந்த தேவையும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு திட்டத்தில் பல Love இருந்தால், அது ஏற்கனவே முதல் பக்கத்தில் இருந்ததாக நீங்கள் கருதினால், அதைச் சேர்க்க வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்யலாம். நீங்கள் ஒரு திட்டத்தை பிரப்போஸ் செய்ய விரும்பினால், ஒரு இணைப்பைக் கொண்டு கருத்துத் தெரிவிக்கவும், இதன் மூலம் மற்றொரு க்யூரேட்டர் அதை மதிப்பாய்வு செய்து சேர்க்கலாம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் ஐ கேட்கலாம் ~~~~~ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை புதிய க்யூரேட்டர்களுக்கு மாறுவோம். மேலும் தகவலுக்கு இதைப் பார்க்கவும்: ~~~~~ English | Español | 한국어 | 简体中文 | 繁體中文 | Català | Français | 日本語 | Polskie | বাংলা | తెలుగు | Tiếng Việt | Türkçe | Română | Português | български | にほんご | ไทย | Nederlands | Deutsch | हिन्दी | bahasa Indonesia வேறு மொழிப்பெயர்ப்புக்கு க்கு நன்றிகள் (திட்டத்தின் உத்வேகத்திற்கு) மேலே எதாவது பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும் நன்றிகள்~